1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 31 ஜனவரி 2024 (13:08 IST)

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு மேலும் 14 ஆண்டு சிறை

Imran Khan - wife Bushra Bibi
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு மேலும் 14  ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான ஊழல் வழக்கு நிரூபிக்கப்பட்டது. இதை  அடுத்து அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு,  கடந்த ஆகஸ்ட் மாதம்  சிறையில் அடைக்கப்பட்டார்.

அந்த நாட்டின் அரசு ரகசியங்களை கசியவிட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த வழக்கில்  ஜாமின் கோரி இம்ரான் கான் தரப்பிலும், இதே வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரோஷி சார்பிலும் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் இருவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. 

இந்த நிலையில் இந்த வழக்கில் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரோஷிக்கு  தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

இது அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு மேலும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அரசின் ரகசியங்களை கசியவிட்டதற்காக  நேற்று இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு  10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில்,  மேலும் ஒரு ஊழல் வழக்கில் அவர்கள் இருவருக்கும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது தோஷாகானா வழக்கில் இருவருக்கும் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.