1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 19 டிசம்பர் 2019 (07:48 IST)

நிறைவேறியது பதவிநீக்க தீர்மானம்: டிரம்ப் பதவி இழக்கின்றாரா?

அமெரிக்க அதிபரை பதவி இழக்க வைக்கக் கோரும் தீர்மானம் சற்று முன்னர் நிறைவேறிய நிலையில் தீர்மானத்திற்கு ஆதரவாக 227 பேர்களும் தீர்மானத்திற்கு எதிராக 179 பேர்களும் வாக்களித்ததால் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து செனட் சபையில் வாக்கெடுப்பு நடக்கும். இந்த வாக்கெடுப்பிலும் தீர்மானம் வெற்றி பெற்றால் அதிபர் டிரம்ப் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடதக்கது 
 
அமெரிக்கா அதிபராக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பதவி ஏற்ற டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவுடன் சேர்ந்து மோசடி செய்ததாகவும் சட்டங்களை தனக்கு சாதகமாக வளைத்து கொண்டதாகவும், உக்ரைன் நாட்டின் அதிபருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன
 
இதனை அடுத்து டிரம்ப் மீதான புகார்களை விசாரணை செய்யவும் அவரை பதவியிலிருந்து நீக்கவும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகிய இரண்டிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அவர் பதவியை இழக்க நேரிடும்
 
தற்போது பிரதிநிதிகள் சபையில் இந்த தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதை அடுத்து விரைவில் செனட் சபையிலும் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. செனட் சபையில் தீர்மானம் வெற்றி பெற்றால் அதிபர் டிரம்ப் பதவி விலகுவதை தவிர வேறு வழியில்லை என்பது குறிப்பிடத்தக்கது