1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Ida Hurricane make disasters in US states

அமெரிக்காவை சூறையாடிய இடா புயல்! – வைரலாகும் வீடியோ!

Ida Hurricane
அமெரிக்காவில் இடா புயல் கரையை கடந்த நிலையில் ஏற்பட்ட சேதாரங்கள் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

அட்லாண்டிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை இடா புயலாக வலுவடைந்த நிலையில் லூசியானா மற்றும் மிசிசிப்பி மாகாணங்களுக்கு இடையே கரையை கடந்துள்ளது.

இதனால் பல்வேறு பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. முக்கியமாக ஷான் லாஃப்பிட்டே, பராட்டாரியா உள்ளிட்ட சிறு நகரங்கள் வெள்ளக்காடாகியுள்ளது. அங்குள்ள மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து உள்ளே நுழையும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் மையப்பகுதியை தாக்கிய புயல்களில் அதிக சேதத்தை இடா விளைவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரையில்
50 ஆயிரத்தை நெருங்கும் தினசரி பாதிப்புகள் – நெருங்கிறதா மூன்றாவது அலை?