எனக்கு பயம் இல்லை - ஜாகீர் நாயக் பேட்டி
எனக்கு பயம் இல்லை - ஜாகீர் நாயக் பேட்டி
சவுதியில் இருந்தபடி இந்தியாவிற்கு வருவதில் எனக்கு பயம் இல்லை என்று ஜாகீர் நாயக் பேட்டி அளித்துள்ளார்.
பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கும் மத போதகர் ஜாகீர் நாயக், சவுதியில் தங்கி இருக்கிறார்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்,” மீடியாக்கள் தான் என் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. இந்தியாவுக்கு வர பயமா என்றால், எனக்கு பயம் இல்லை. இதுவரை ஒரு இந்திய அரசு அதிகாரி கூட என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. எனவே ஊடகங்கள் நடத்தும் விசாரணைக்கு நான் வரத்தேவையில்லை. நான் எப்போதும் வன்முறையை தூண்டும் பேச்சு பேசியது கிடையாது. எப்போதும் மனித நேயத்தை வலியுறுத்தியே பேசியுள்ளேன். இந்திய ஊடகங்கள் என்னைப் பற்றி தவறாக சித்தரிக்கின்றன. பிரதமர் மோடி இந்து-முஸ்லிம் சமூகத்துக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்க முயன்றால், நான் அதில் முழுமையாக செயல்பட தயார்.” என்றார்