வீசிய அனல் காற்றில் கருகிய வெளவால்கள் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவில் அனல் காற்று வீசியதில் நூற்றுக்கணக்கான வெளவால்கள் உயிரிழந்தன.
ஆஸ்திரேலியாவின் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிட்னி நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் அனல் காற்று வீசியது. சிட்னி நகரில் 47.3 டிகிரி செல்வியஸ் வெப்பம் அதிகப்பட்சமாக பதிவானது.
இதனால் நுற்றுக்கணக்கான வௌவால்கள் பரிதாபமாக உயிரிழந்தன. இறந்த வெளவால்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல பறவைகள் மற்றும் விலங்குகள் இந்த அனல் காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆஸ்திரேலியேவில் உள்ள இந்த பெரிய வெளவால்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது.