மனிதர்களை குளிக்க வைக்கும் வாஷிங் மெஷின்: ஜப்பான் நிறுவனம் அறிமுகம்..!
துணிகளை துவைக்கும் வாஷிங் மெஷின் பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது முதல் முறையாக மனிதர்களை குளிப்பாட்டும் வாஷிங் மெஷினை ஜப்பான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த மிஷன் குறித்த செய்திகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மனிதர்களை 15 நிமிடங்களில் இந்த மெஷின் குளிப்பாட்டி காய வைக்கும் தன்மை உடையது என்றும், ஜப்பானின் சயின்ஸ் கம்பெனி என்ற நிறுவனம் இந்த மனித வாஷிங்மெஷினை அறிமுகம் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மிஷினுக்குள் ஏறியதும் பாதி அளவுக்கு இதமான நீர் நிரப்பப்படும் என்றும், அதன் பின்னர் சிறு குமிழ்களுடன் சுற்றியும் வேகமாக நீர் பாய்ச்சி அடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. குமிழ் உடையும் போது உருவாகும் அழுத்தத்தினால் உடலில் உள்ள அழுக்குகள் சுத்தமாகும் என்றும் ஜப்பான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மனித வாஷிங் மெஷின் விரைவில் நடைபெறும் கண்காட்சியில் பொதுமக்கள் மத்தியில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும், சோதனையாக ஆயிரம் பேர் இந்த மனித வாஷிங்மெஷினில் குளிக்க வைத்து காண்பிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கண்காட்சிகள் அறிமுகம் செய்யப்படும் போது அதன் விலை குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
Edited by Siva