40 வருடம் பழமையான டி.என்.ஏ க்ளோனிங்! – வெற்றிகரமாக பிறந்த குதிரை!

Horse
Prasanth Karthick| Last Modified புதன், 16 செப்டம்பர் 2020 (13:24 IST)
அழிந்து வரும் பழமையான குதிரை இனத்தின் டிஎன்ஏவை கொண்டு க்ளோனிங் முறையில் புதிதாக குதிரை உருவாக்கப்பட்டுள்ளது அமெரிக்காவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் அழிந்து வரும் குதிரை இனமான பிரஸ்வால்ஸ்கி குதிரை இனத்தை காப்பதற்காக 40 ஆண்டுகள் முந்தையதான அதன் டி.என்.ஏவை கொண்டு க்ளோனிங் முறையில் புதியதொரு குதிரையை உருவாக்கியுள்ளனர் டெக்ஸாஸ் கால்நடை விஞ்ஞானிகள்.

டெக்ஸாஸ் கால்நடை வளாகத்தில் க்ளோன் செய்யப்பட்டு வாடகை தாய் முறையில் உருவான இந்த குதிரை சாண்டியாகோ மிருக காட்சி சாலையில் பிறந்துள்ளது. மிருகக்காட்சி சாலையில் க்ளோனிங் முறையில் உருவான முதல் குதிரை இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றிகரமான ஆய்வின் மூலம் அழியும் நிலையில் உள்ள மேலும் பல விலங்குகளையும் மீண்டும் உருவாக்கி அவற்றை பாதுகாக்க முடியும் என உயிரியல் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :