1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : செவ்வாய், 7 ஜனவரி 2020 (16:14 IST)

தொலைக்காட்சி தொகுப்பாளரை கன்னத்தில் அறைந்த பாக்., அமைச்சர் !

டிக் டாக்கில் பிரலமான ஒரு பெண்ணுடன் தன்னைத் தொடர்ப்பு படுத்தி பேசிய ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளரை பாகிஸ்தான் அமைச்சர் கன்னத்தில் அறைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் இம்ரான் கான் தலைமயிலான பாக்கித்தான் தெஹரீக்-எ-இன்சாஃப்  ஆட்சி நடைபெற்று வருகிறது.  இவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர் பவாத் சவுத்ரி. இவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக பதவி வகுத்து வருகிறார்.
 
இந்நிலையில், அங்குள்ள ஒரு டிவி சேனல் தொகுப்பாளர் முபாசிர் லூக்மேன் என்பவர்  பாகிஸ்தானில் டிக்டாக் வீடியோவில் புகழ்பெற்ற இளம்பெண் ஹரீம் ஷா என்பவருடன் அமைச்சர் பவாத்தை தொடர்புபடுத்தி பேசியிருந்தார்.
 
இதில், கோபமுற்ற அமைச்சர்,ஒரு மாகாண அமைச்சரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த நிகச்சி தொகுப்பாளர் முபாசிர் லூக்மேனை கன்னத்தில் அறைந்தார். 
 
அதாவது, தன்னைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்ததற்க்காக அவரை அடித்ததாகக் கூறியுள்ளார்.