நாளை காலை கரையைக் கடக்கிறது தீத்லி புயல் – 5 மாவட்டங்கள் உஷார்
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள தீத்லி புயல் நாளைக் காலை ஆந்திரா வழியாக ஒடிசாவில் கரையைக் கடக்கிறது.
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறி ஆந்திரா வழியாக ஒடிசாவில் கரையைக் கடக்குமென வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. மேலும் இதனால் தமிழகத்திலும் மழைப் பெய்ய வாய்ப்புள்ளதாக அதனால மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாமெனவும் அறிவித்திருந்தது.
ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு தமிழகத்தில் மழை பெய்யவில்லை. அதனால் இன்று நள்ளிரவில் கரையைக் கடக்கும் புயல் ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை வழியாக ஒடிசாவில் நாளைக் காலை கரையைக் கடக்குமென மத்திய வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது.
இதனையடுத்து ஒடிசாவின் 5 மாவட்டங்களில் மழை அளவு அதிகமாக இருக்குமென்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனால் அந்த 5 மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புயல் குறித்து பொது மக்கள் பயப்படத் தேவையில்லை எனவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மேலும் அரசு சார்பில் கூறியுள்ளதாவது ’800க்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. விடுமுறையில் சென்ற அரசு ஊழியர்கள் அனைவரும் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவசர கால படகுகளும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன’.