திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 22 மே 2018 (16:28 IST)

வெயில் கொடுமை: பாகிஸ்தானில் 65 பேர் பலி

பாகிஸ்தானில் கோடை வெயில் வாட்டியெடுக்கிறது. இதன் காரணமாக கடந்த 3 நாட்களில் 65 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
 
அதிகளவில் மூஸ்லீம்கள் வாழும் நாடு பாகிஸ்தான். இங்கு பெரும்பாலானோர் ரம்ஜானை முன்னிட்டு நோன்பினை கடைபிடித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் அங்கு அதிக அளவில் வெயில் வீசி வருகிறது. குறிப்பாக கராச்சியில் 44 டிகிரி வரை வெயில் வீசுவதால் உஷ்ண நிலை மாறி வருகிறது. இதன் காரணமாக இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், இந்த வெயிலின் தாக்கத்தினால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிரது. இதனால் அங்குள்ள மக்களை வெயில் வீசும் நேரத்தில் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.