வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 22 மே 2018 (12:13 IST)

பாகிஸ்தான் பொதுத் தேர்தல்: தேர்தல் ஆணையம் பரிந்துரை

பாகிஸ்தான் பொதுத்தேர்தலை வரும் ஜுலை 25, 26 அல்லது 27 ஆகிய தேதிகளில் நடத்த அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிபர் மம்னூன் ஹீசைனுக்கு பரிந்துரை செய்துள்ளது.
 
பாகிஸ்தானில் நடந்து வரும் ஆளும் அரசின் ஆட்சிக்காலம் வரும் மே 31ம் தேதி முடிவடையவுள்ளது. இதனால் பாகிஸ்தானில் கட்டாயம் பொதுத் தேர்தலை நடத்தும் சூழ்நிலை உண்டாகியுள்ளது. ஏற்கனவே தேர்தல் நடத்துவது குறித்து  பாகிஸ்தானின் பிரதமரும், எதிர்கட்சி தலைவரும் ஆலோசனை நடத்தினர்.
 
அங்கு பொதுத் தேர்தல் நடத்துவது மட்டுமல்லாமல் காபந்து பிரதம மந்திரிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கும் ஆலோசனை நடத்தப்படுகிறது. இதற்காக தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டுவந்தது.
 
இந்நிலையில், தேர்தல் ஆணையம் பாகிஸ்தான் பொதுத்தேர்தலை வரும் ஜுலை 25, 26 அல்லது 27 ஆகிய தேதிகளில் நடத்துமாறு அதிபர் மம்னூன் ஹீசைனுக்கு பரிந்துரைத்துள்ளது.