1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 10 அக்டோபர் 2016 (21:49 IST)

இறந்த பாட்டியின் உடலுடன் 5 மாதம் வாழ்ந்த பேரன்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிரிஸ்டோபர்(30) என்பவர் இறந்த பாட்டியின் சடலத்துடன் 5 மாதம் காலம் வாழ்ந்துள்ளார். 


 

 
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிரிஸ்டோபர்(30) என்பவர் தனது பாட்டியுடன் எரிக்கா கிராஸின்-பிரெஸ்லின்(85) உடன் ஒரு வீட்டில் வசித்து வந்தார்.
 
அடிக்கடி வீட்டு தெருவில் நடமாடும் எரிக்கா கிராஸின்-பிரெஸ்லின் பல மாதங்களாக வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்துள்ளார்.
 
இது அவரது வீட்டின் அருகே இருப்பவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வாந்துள்ளது.
 
இதனால் அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். கிரிஸ்டோபர் வீட்டுக்கு விரைந்து வந்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பாட்டி இறந்த நிலையில் சடலமாக இருந்துள்ளார்.
 
காவல்துறையினர் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனௌப்பி வைத்தனர். விசாரணையில் கிரிஸ்டோபரின் பாட்டி கடந்த மே மாதம் இறந்ததாகவும், அதை வெளியில் கூறினால் வீட்டை விட்டு காலி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றும் இருந்ததாக தெரியவந்தது.