1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 21 மே 2018 (20:04 IST)

அமெரிக்க ராணுவத்துடன் ஆய்வு; கூகுள் பணியை விட்டு வெளியேறிய 12 பொறியாளர்கள்

கூகுள் நிறுவனம் அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து செய்யும் ஆய்வுகளை எதிர்த்து 12 பொறியாளர்கள் பணியை விட்டு வெளியேறி உள்ளனர்.

 
அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா உளவு விமானங்கள் எடுக்கும் காணோளிகளை செயற்கை நுண்னறிவு மற்றும் கற்றல் இயந்திரங்கள் மூலம் பகுப்பாய்வு செய்து அக்காணொளிகளில் இருக்கும் வாகனங்களையும் இடங்களையும் பிரித்து அறியும் திட்டம் ப்ராஜெக்ட் மேவன்.
 
இந்த ஆய்வு எதிர்காலத்தில் ஆளில்லா உளவு விமானங்கள் குண்டு வீசுவதற்கு பயன்படும் என்று கூறப்படுகிறது. இந்த மேவன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூகுள் நிறுவனத்தின் பணியாற்றிய 12 பொறியாளர்கள் பணியை விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மேவன் திட்டம் கூகுளின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் என்றும், தொழில்நுட்பத்தை ஆயுதமாக்கிவிட்டோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.