வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 15 மார்ச் 2017 (21:30 IST)

ஜிமெயிலில் மெயில் மட்டுமல்ல, இனி பணமும் அனுப்பலாம்

கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் இன்று உலக அளவில் புகழ் பெற்று விளங்குகிறது.  மின்னஞ்சல் சேவையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இந்த ஜிமெயிலில் தற்போது பணப் பரிவர்த்தனை செய்யும் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. இதனால் ஜிமெயில் பயனாளிகள் உற்சாகமாகியுள்ளனர்.





எளிமையான முறையில் ஜிமெயில் மின்னஞ்சல் மூலம் பணம் அனுப்பும் இந்த வசதி. ஜிமெயில் மொபைல் அப்ளிகேஷனிலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஜிமெயிலில் மின்னஞ்சல் அனுப்பும்போது அதில் அட்டாச்மெண்ட்ஸ் என்ற ஆப்சன் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இனிமேல் இந்த ஆப்சனை க்ளிக் செய்தால் அதில் பணம் அனுப்பவதற்கான Send Money என்ற ஆப்ஷன் இருக்கும். அதன் மூலம் பணத்தை வேறு எந்த ஜிமெயில் முகவரி  உள்ள நபர்களுக்கும் அனுப்ப முடியும். பணத்தை பெற்று கொள்பவர் தனது மொபைலில் ஜிமெயில் அப்ளிகேஷன் வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கம்பியூட்டர் மூலம் ஜிமெயிலில் பணம் அனுப்ப வேண்டும் என்றால், Compose என்ற பட்டனுக்கு அருகில் சிறிதாக டாலர் ($) குறியீடு இருக்கும். அதை க்ளிக் செய்து பணத்தை அனுப்பலாம். பணம் அனுப்புவது மட்டுமின்றி பணத்தைக் கேட்கும் வசதியும் உண்டு.

இந்த வசதி இப்போதைக்கு அமெரிக்காவில் உள்ள ஜிமெயில் பயனாளிக்கு மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மிக விரைவில் இந்தியா உள்பட அனைத்து நாடுகளுக்கும் இந்த வசதி கிடைக்கும். மேலும் இந்த வசதி ஐபோன் பயன்படுத்துபவர்களுக்கு கிடையாது.