வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 27 ஜனவரி 2022 (13:46 IST)

குண்டாக இருப்பதால் 2 மணி நேரத்தில் வேலையில் இருந்து நீக்கிய நிறுவனம்: இளம்பெண் அதிர்ச்சி!

குண்டாக இருப்பதால் 2 மணி நேரத்தில் வேலையில் இருந்து நீக்கிய நிறுவனம்: இளம்பெண் அதிர்ச்சி!
குண்டாக இருப்பதால் இளம்பெண் ஒருவர் பணிக்கு சேர்ந்த இரண்டு மணி நேரத்தில் வேலையிலிருந்து நீக்கப்பட்டு உள்ளதால்அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
ஆஸ்திரேலியாவை சேர்ந்த டாஸ்மானியா என்ற பகுதியைச் சேர்ந்த இளம்பெண் சமீபத்தில் கேளிக்கை விடுதி ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். அவர் இந்த வேலையில் சேர்வதற்காக சொந்த வீட்டைவிட்டு 3000 கிலோ மீட்டர் பயணம் செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வேலையில் சேர்ந்த இரண்டு மணி நேரத்தில் கேளிக்கை விடுதி உரிமையாளர் அந்த பெண் குண்டாக இருப்பதாக கூறி உடனடியாக வேலையை விட்டு நீக்கினார்
 
 இதனால் 3000 கிலோ மீட்டர் பயணம் செய்து வந்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் தற்போது தனது குடும்பம் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்ட தாகவும் அவர் கூறியுள்ளார்
 
இது குறித்து தகவல் இணையதளங்களில் பரவிய நிலையில் வேலையை விட்டு நீக்கிய விடுதி உரிமையாளருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது