செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (18:11 IST)

மியான்மர் பாராளுமன்றம் முன் நடனமாடிய பெண்: ராணுவ புரட்சி இடையே பரபரப்பு!

மியான்மர் பாராளுமன்றம் முன் நடனமாடிய பெண்
மியான்மர் நாட்டில் சமீபத்தில் திடீரென ராணுவ புரட்சி ஏற்பட்டு அந்நாட்டின் முக்கிய தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் பாராளுமன்றத்தை சுற்றிலும் ராணுவ வீரர்கள் காவலுக்கு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஒரு பக்கம் மியான்மர் நாட்டில் இராணுவ புரட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இதைப் பற்றி கவலைப்படாமல் மியான்மர் நாட்டின் நடனப் பெண் ஒருவர் பாராளுமன்றத்தின் முன் நடனப்பயிற்சி ஆடும் வீடியோ ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த பெண் தனக்கு பின்னால் செல்லும் ராணுவ வாகனங்களை பொருட்படுத்தாமல் நடன பயிற்சியில் மூழ்கியிருந்தார். இது குறித்த வீடியோ யூடியூபில் வெளியாகி ஒரு கோடிக்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இராணுவப் புரட்சி நடைபெறும் நேரத்தில் தனது நடனப் பயிற்சியை விடாமல் செய்து கொண்டிருக்கும் இந்த பெண்ணிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது