1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: புதன், 16 ஆகஸ்ட் 2017 (16:06 IST)

16 சிறுமிகளை பலாத்காரம் செய்த 70 வயது மருத்துவர்!

16 சிறுமிகளை பலாத்காரம் செய்த 70 வயது மருத்துவர்!

ஜெர்மனியை சேர்ந்த ஹர்ட்முட் ஹோப் என்ற 70 வயதான மருத்துவர் ஒருவர் சிலி நாட்டில் இருந்த போது 16 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து இவருக்கு சிலி நாடு வழங்கிய சிறை தண்டனையை ஜெர்மனி நீதிமன்றம் தற்போது உறுதி செய்துள்ளது.


 
 
சிலியில் நாஜிக்களின் அமைப்பான கொலோனிய டிக்னிடட் குழுவில் செயல்பட்டு வந்தார் அந்த மருத்துவர். இந்த குழுவானது அந்த பகுதியில் உள்ள மக்களை அடிமைகளைப்போல் நடத்தி சித்திரவதை செய்து வந்தனர்.
 
இந்நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு அந்த குழுவில் செயல்பட்டு வந்த அந்த மருத்துவர் ஹர்ட்முட் ஹோப் மீது சிலி அரசு பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தது. அதில் குறித்த மருத்துவர் 16 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் வழக்கு இருந்தது.
 
இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகும் முன்னரே அந்த மருத்துவர் சிலியில் இருந்து வெளியேறி தனது சொந்த நாடான ஜெர்மனிக்கு குடிபெயர்ந்துள்ளார். இதனையடுத்து அந்த மருத்துவர் அவரது சொந்த நாடான ஜெர்மனியிலேயே தனது தண்டனை காலத்தை அனுபவிக்க அனுமதிக்க வேண்டும் என சிலி அரசு ஜெர்மன் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது.
 
இதனை ஏற்றுக்கொண்ட ஜெர்மன் நீதிமன்றம் மருத்துவர் ஹர்ட்முட் ஹோப்புக்கு சிலி நீதிமன்றம் வழங்கிய ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.