வெள்ளி, 31 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated: ஞாயிறு, 19 மார்ச் 2023 (11:22 IST)

அமெரிக்க பள்ளிகளிலும் 'இலவச உணவு' திட்டம்! காலை, மாலை இருவேளைகளில் உணவு..!

தமிழகம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் பள்ளிகளில் இலவச உணவு வழங்கும் திட்டம் இருக்கும் நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு மாகாணத்தில் உள்ள பள்ளியிலும் இலவச உணவு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதிய உணவு திட்டம் என்ற திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் காமராஜர் தோற்றுவித்தார். அதன் பிறகு எம்ஜிஆர் ஆட்சியில் சத்துணவு திட்டம் தொடங்கப்பட்டது என்பதும் அதன் பிறகு ஜெயலலிதா கருணாநிதி எடப்பாடி பழனிச்சாமி மு க ஸ்டாலின் ஆட்சியிலும் அது தொடர்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடப்பட்டது. சமீபத்தில் தமிழகம் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் அமெரிக்காவின் மினசோட்டா என்ற மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் காலை மதியம் என இரண்டு வேலைகளிலும் மாணவர்களுக்கு இலவச வழங்கும் உணவு வழங்கும் திட்டத்திற்கான அறிவிப்பை அம்மாகாண மேயர் டிம் வால்ஸ் என்பவர் அறிவித்துள்ளார். 
 
ஏழ்மை மற்றும் சிறு வயது மாணவர்களின் பசியை போக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva