ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 8 மார்ச் 2021 (10:23 IST)

பிரான்சில் ஹெலிகாப்டர் விபத்து; பிரபல தொழிலதிபர் மரணம்!

பிரான்ஸ் நாட்டில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் பிரபல தொழிலதிபரும், அரசியல்வாதியுமான டசால்ட் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் பிரபல டசால்ட் விமான உற்பத்தில் நிறுவனத்தின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் ஆலிவர் டசால்ட். இவர் பிரான்ஸ் நாட்டின் மத்திய வலது குடியரசு கட்சியின் எம்.பியாகவும் பதவி வகித்து வந்தவர்.

இந்நிலையில் நேற்று பிரான்சின் வடக்கே நார்மாண்டி பகுதியில் ஹெலிகாப்டரில் டசால்ட் தனது ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தபோது காலாவ்டோஸ் என்ற பகுதியில் விபத்தில் சிக்கியது. இதில் ஆலிவர் டசால்ட் பலியானார்.

அவரது இறப்பிற்கு பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மக்ரான் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் இந்த சம்பவம் பிரான்சில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.