1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 7 மார்ச் 2021 (18:17 IST)

முடக்கத்தான் கீரையை தொடர்ந்து சாப்பிடுவதன் பயன்கள் !!

முடக்கத்தான் இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு தினமும் உண்டுவர, சொறி, சிரங்கு,கரப்பான், போன்ற தோல் நோய்கள் குணமாகும்.மேலும் இந்த கீரையை அரைத்து தோல்களில் பூசியும் வரலாம்.
 
முடக்கத்தான் கீரையை அரைத்து சாறு எடுத்து, காது வலி இருந்தால் காதில் 2 சொட்டு ஊற்ற காதுவலி குணமடையும்.
 
இந்த முடக்கத்தான் கீரையை அரைத்து, கர்பிணி பெண்களின் அடிவயிற்றில் பூசி வர, பிரசவம் சுகபிரசவமாக அமையும். மேலும்,குழந்தை பெண்களுக்கு இந்த முடக்கத்தான் கீரையை பெற்ற பெண்களின் அடிவயிற்றில் அரைத்து பூச கருப்பையில் உள்ள நச்சுகள் வெளியேறும்.
 
முடக்கத்தான் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, நெல்லிக்காய் அளவு  எடுத்து பனைவெல்லம் சேர்த்து, உண்டுவர குடலிறக்க நோய் குணமாகும்.
 
முடக்கத்தான் கீரையை தொடர்ந்து,உண்டு வந்தால் புற்று நோயின் தாக்கம் குறையும். வீரைவீக்கம் உள்ளவர்கள் முடக்கத்தான் கீரையை அரைத்து விதைகளின்  மிது பற்று போட விதை வீக்கம் குணமாகும்.
 
முடக்கத்தான் கீரையின் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறு நீரகத்திற்கு எடுத்துச்சென்று விடும். இதுபோல் எடுத்துச்சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நம் உடலிலே விட்டு விடுகிறது. இது ஒரு மிக முக்கியமான  இணையான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறது.