ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 13 நவம்பர் 2024 (09:18 IST)

டிரம்ப் ஆட்சி.. நாட்டை விட்டு வெளியேறினால் சிறப்பு சலுகை: கப்பல் நிறுவனம் அறிவிப்பு..!

Ship
அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சி நடைபெற இருக்கும் நிலையில், அவரது ஆட்சி பிடிக்காமல் நாட்டை விட்டு வெளியேறுபவர்களுக்கு நான்கு ஆண்டுகள் கப்பலில் சுற்றுலா செல்ல வசதி செய்து தரப்படும் என்று கப்பல் நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிரம்ப் பெயரை சொல்லாமல் அந்த கப்பல் நிறுவனம் இந்த சலுகையை அறிவித்துள்ள நிலையில், இந்த கப்பலில் நீங்கள் பணம் செலுத்தினால் உங்கள் கவலை எல்லாம் மறந்து விடும் என்றும், நீங்கள் கப்பலில் காலடி வைத்தவுடன் உங்கள் பயணம் தொடங்கிவிடும் என்றும், உலகின் மிகச் சிறந்த இடங்களை உங்களுக்கு நாங்கள் காட்டுவோம், தெரியாதவற்றை தெரிந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துக் கொள்கிறது.

அரசியலுக்கு அப்பாற்பட்டு உலகை ஆராய்வதற்கான ஆர்வத்திற்காக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலில் நான்கு ஆண்டுகள் பயணம் செய்வதற்கு மற்றும் தங்கும் அறைக்கு சேர்த்து இந்திய மதிப்பில் சுமார் 33 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கப்பலில் பயணம் செய்தால் டிரம்ப் ஆட்சி செய்யும் 4 ஆண்டுகளும் அமெரிக்காவில் இருக்காமல் உலகை சுற்றலாம்.


Edited by Siva