ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 17 ஜூன் 2020 (17:38 IST)

வடகொரியாவின் மோசமான மறுபக்கம்: வைரல் வீடியோ!

தென்கொரியா அதிகாரிகளை சந்தித்து பேச பயன்படுத்தப்பட்ட அலுவலக கட்டிடத்தை வடகொரியா வெடிவைத்து தகர்த்த வீடியோ வெளியாகியுள்ளது. 
 
வடகொரிய - தென்கொரிய எல்லையில், அமைந்துள்ள கேசாங் நகரில் இருக்கும் இருநாட்டு பொது தகவல் தொடர்பு அலுவலகம், வடகொரியாவால் தகர்க்கப்பட்டுள்ளது என்று தென்கொரியா தெரிவித்தது. 
 
இரு நாடுகளும் 2018 ஆம் ஆண்டு பேச்சு வார்த்தையைத் தொடங்கிய பின்னர் வடகொரிய எல்லைக்குள் இருக்கும் இந்த மையம் மறுசீரமைக்கப்பட்டது. தென் கொரிய மற்றும் வட கொரிய எல்லையில் உள்ள ராணுவம் விலக்கப்பட்ட பகுதிக்குள் நுழைய தங்களது ராணுவம் தயாராக இருப்பதாக வட கொரியா எச்சரித்திருந்த சமயத்தில் இந்த தகர்ப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
 
இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ...