வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 9 மார்ச் 2024 (10:21 IST)

உணவு பொட்டலம் தலையில் விழுந்து காசா மக்கள் பலி! – உபத்திரவத்தில் முடிந்த அமெரிக்காவின் உதவி!

US Food parcels
காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து போர் நடத்தி வரும் நிலையில் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அமெரிக்கா வீசிய உணவு பொட்டலங்கள் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.



காசாவில் குடிக்கொண்டுள்ள ஹமாஸ் அமைப்பிற்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஆண்டு முதலாக தொடர்ந்து போர் நடந்து வருகிறது. இஸ்ரேலில் இருந்து பலரை பணையக்கைதிகளாக ஹமாஸ் பிடித்த நிலையில் இஸ்ரேல் காசா மீது நடத்தி வரும் பதில் தாக்குதலில் இதுவரை சுமார் 27 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் பலியாகியுள்ளனர். இதில் பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளும் அடக்கம் என கூறப்படுகிறது.


இந்த போர் விவகாரத்தில் இஸ்ரேலுக்கு தேவையான ஆயுதங்கள், விமானங்களை கொடுத்து அமெரிக்கா தொடர்ந்து இஸ்ரேல் பக்கம் நின்று வருகிறது. அதேசமயம் ஐ,நா உள்ளிட்ட அமைப்புகளின் தலையீடால் காசா மக்களை காப்பாற்றுவதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில் நல்லெண்ண அடிப்படையில் காசா மக்களுக்கு சமீபத்தில் அமெரிக்கா உணவு விநியோகம் செய்தது.

விமானம் மூலமாக காசா பகுதியில் உணவுப் பொட்டலங்கள் அடங்கிய பெரிய பார்சல்கள் பாராசூட் கட்டி வீசப்பட்டன. இதில் சில பார்சல்களின் பாராசூட்கள் சரியான திறக்காததால் முழு வேகத்தில் சென்று நிலத்தில் விழுந்தன. இந்த பார்சல்கள் தாக்கியதில் 5 பேர் நசுங்கி பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கிக் கொண்டே காசா மக்களுக்கு உணவு வழங்கும் அமெரிக்காவின் நல்லெண்ணத்தை பலரும் விமர்சித்துள்ளனர்.

Edit by Prasanth.K