வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 1 டிசம்பர் 2022 (17:23 IST)

2 பேட்ஸ்மேன்கள் அடித்த இரட்டை சதங்கள்.. 594 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா

double century
2 பேட்ஸ்மேன்கள் அடித்த இரட்டை சதங்கள்.. 594 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இரண்டு பேரும் இரட்டைச் சதமடித்து உள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
மேற்கிந்திய தீவுகள் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து உள்ள நிலையில் இன்று பெர்த் நகரில் முதலாவது கிரிக்கெட் போட்டி தொடங்கியது
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய அணியின் லாபுசாஞ்சே மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் இரட்டை சதங்கள் அடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி தற்போது பேட்டிங் செய்து வரும் நிலையில் சற்று முன் வரை அந்த அணி 20 ஓவர்களில் 74 ரன்கள் எடுத்துள்ளது என்பதை 124 ரன்கள் பின்னோக்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran