1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 30 ஜூன் 2018 (12:20 IST)

சவுதியில் ஓட்டுனர் உரிமம் பெற்ற முதல் இந்தியப் பெண்

சவுதி அரேபியாவில் ஓட்டுனர் உரிமம் பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை கேரளாவை சேர்ந்த செவிலியர் ஒருவர் பெற்றுள்ளார்.
சவுதி அரேபிய மன்னர் சல்மானும் அவரது மகன் முகமது பின் சல்மானும் பல்வேறு பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களது மாற்றங்கள் சில பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக உள்ளது.
 
இதன்படி இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பெண்கள் முறைப்படி ஓட்டுனர் உரிமம் பெற்று கார் ஓட்டலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இதனையடுத்து சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் கடந்த ஞாயிற்றிக் கிழமை முதல் பெண்கள் கார் ஓட்ட ஆரம்பித்துள்ளனர். 
இந்நிலையில் சவுதி அரேபியாவில் ராணுவ மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வரும் கேரள மாநிலம் பத்தினம் திட்டா பகுதியை சேர்ந்த சாரம்மா தாமஸ் ஓட்டுனர் உரிமம் பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
 
பல பெண்கள் கார் ஓட்டுவதற்காக பயிற்சி பள்ளிகளிலும், ஓட்டுனர் உரிமம் பெற பல பெண்களும் விண்ணப்பித்து வருகின்றனர்.