1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 29 டிசம்பர் 2017 (16:15 IST)

மகளை பாலியல் அடிமையாக்கி; 8 குழந்தைகளுக்கு தந்தையான நபர்!!

அர்ஜென்டினாவில் பெற்ற மகளை 22 ஆண்டுக்ளாக பாலியல் அடிமையாக வைத்திருந்த தந்தை மீது வழக்கு பதியப்பட்டதையடுத்து தற்போது அந்த நபருக்கு 12 ஆண்டுகள் 6 மாதம் சிரை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
 
அர்ஜென்டினாவை சேர்ந்தவர் Domingo Bulacio, இவர் 22 ஆண்டுகளுக்கு முன்னர் தனது மனைவியை அடித்து துரத்திவிட்டு மகளுடன் வசித்து வந்தார். அப்போது 11 வயதான அவரது மகளுக்கு அன்று முதல் பல கொடுமைகளை கொடுத்து வருகிறார். 
 
அதோடு அவரை 22 ஆண்டுகள் பாலியல் அடிமையாக வைத்திருந்துள்ளார். இதனால் 8 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இதற்கு மேலும், தந்தையின் கொடுமைகளை பொருத்துக்கொள்ள முடியாத காரணத்தால் போலீஸில் புகார் அளித்துள்ளார். 
 
இந்த புகாரின் பெயரில் DNA சோதனை மேற்கொள்ளப்பட்டு அது உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த நபருக்கு 12 ஆண்டுகள் 6 மாத சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.