செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 26 மார்ச் 2018 (12:35 IST)

உலகின் 30 சதவீத இணையதளங்களை வேவு பார்க்கிறது பேஸ்புக்; அதிர்ச்சியூட்டும் ஆய்வின் தகவல்

உலகில் உள்ள இணையதளங்களில் 30 சதவீதத்தை பேஸ்புக் நிறுவனம் வேவு பார்ப்பதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனம் அமெரிக்கத் அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் நிறுவனத்திடமிருந்து தகவல்களைப் பெற்று மக்கள் மனதில் மாற்றத்தை உண்டாக்கி தேர்தலில் முடிவுகள் மாற பெரிதும் உதவி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பேஸ்புக்கில் உள்ள ஐந்து கோடி பேரின் தகவல்களை, கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் திருடியதாக தகவல் வெளியானது. இதனை ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க், இதுபோல் இனி தவறுகள் நடக்காது என மன்னிப்பு கோரினார்.
 
இந்நிலையில் ஜெர்மனியைச் சேர்ந்த கிலிக்ஸ் (Cliqz) என்ற  நிறுவனம் பேஸ்புக் குறித்து  ஒரு ஆய்வு நடத்தியுள்ளது. அதில் உலக அளவில் 30% இணையதளங்களை பேஸ்புக் நிறுவனம் வேவு பார்க்கிறது என்று தெரிவித்துள்ளது. நாம் பேஸ்புக் அக்கவுண்டை டெலிட் செய்தாலும் கூட நாம் பயன்படுத்தும் இணையதளங்களின் விவரங்களை பேஸ்புக் வேவு பார்க்க முடியும் என அதிர்ச்சிகர தகவல் வெளியாகி இருக்கிறது. இது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.