1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 15 அக்டோபர் 2021 (08:59 IST)

விண்வெளி டூர் கெடக்கட்டும்.. பூமியை காப்பாத்துங்க முதல்ல..! – இங்கிலாந்து இளவரசர் வேண்டுகோள்!

உலக பணக்காரர்கள் விண்வெளி சுற்றுலாவை விடுத்து பூமியை காக்க முயற்சிகள் எடுக்க வேண்டுமென இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக உலகம் முழுவதும் விண்வெளி சுற்றுலா குறித்த ஆர்வம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சமீபத்தில் அமெரிக்காவை சேர்ந்த பெரும் பணக்காரர்களான ஜெஃப் பெசோஸ், ரிச்சர்ட் பிரான்ஸன் உள்ளிட்டோர் விண்வெளி பயணம் மேற்கொண்டனர். மேலும் விண்வெளி பயணத்தை கமர்ஷியல் ஆக்குவதற்காகவும் பல நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள இங்கிலாந்து இளவரசர் வில்லியம் “உலகில் மாற்றத்தை ஏற்படுத்த கூடிய திறமைப்படைத்தவர்கள் விண்வெளி பயண மோகத்தை விடுத்து, பூமியை மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.