புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 7 அக்டோபர் 2020 (15:39 IST)

வேதியியலுக்கான நோபல் பரிசு: 2 பெண் விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு

வேதியியலுக்கான நோபல் பரிசு: 2 பெண் விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், அறிவியல், ஆராய்ச்சி, இலக்கியம், போன்ற துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படும் என்பதையும் இந்த 2020ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசுகள் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்
 
நேற்று இயற்பியலுல்கான நோபல் பரிசு ரோஜர் பென்ரோஸ், ரெயின் ஹார்ட் ஜென்சில், ஆண்டிரியா கெஸ் ஆகிய 3 பேருக்கு  அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்றும் முன் இந்த ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது
 
வேதியிலுக்கான இந்த நோபல் பரிசை 2 பெண் விஞ்ஞானிகள் பகிர்ந்து கொள்கின்றனர். பிரான்ஸ் நாட்டின் இமானுவேல் சார்பென்டியர் மற்றும் அமெரிக்கா நாட்டின் ஜெனிஃபர் ஏ டவுட்னா ஆகியோர் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை பெறுகிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது