திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 20 மே 2022 (17:53 IST)

உலகின் நெ.1 கோடீஸ்வரர் எலான் மஸ்க் மீது பாலியல் குற்றச்சாட்டு.....

உலகப் பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ளவர் எலான் மஸ்க். சமீபத்தில் இவர்  டுவிட்டர் நிறுவனத்தை வாங்கவுள்ளதாக பேச்சு அறிவித்தார். ஆனால், அதில் நிறைய போலிக்கணக்குகள் நிறைந்துள்ளதால் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  விமானப் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எலான் மஸ்க் மீது ஒரு பரபரப்பு குற்றச்சட்டு எழுந்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு அவர் தனி விமானத்தில் பறந்தபோது, அங்கு இருந்த பணிப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக பிரபல செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.  மேலும், 2018 ஆம் ஆண்டு எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் 1.93 கோடி ரூபாய் தொகையும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால், இதற்கு எலான் மஸ்க் மறுப்பு தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், என் மீது அரசியல் ரீதியான தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த அவதூறுகள் எல்லாம் சுதந்திர பேச்சு  உரிமை குறித்து பேசுவதில் இருந்து தடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக எலான் மஸ்க் அவர் அமெரிக்க அதிபர் பைடனை விமர்சித்து வருவத் குறிப்பிடத்தக்கது.