1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 13 மே 2022 (16:51 IST)

டிவிட்டரை வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்திய எலான் மஸ்க்… பின்னணி என்ன?

டிவிட்டரை வாங்கும் முடிவை தற்காலிகமாக கிடப்பில் போட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கினார். இதனையடுத்து அவர் டுவிட்டரில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 

முதல் கட்டமாக டுவிட்டர் நிறுவனத்திற்கான செலவுகளை குறைக்கவும் வருமானத்தை அதிகரிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது. இதற்காக ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் இப்போது திடீரென்று டிவிட்டரை வாங்கும் முடிவை கிடப்பில் தற்காலிகமாக கிடப்பில் போட்டுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அதற்குக் காரணம் டிவிட்டரில் போலியாக இருக்கும் 5 சதவீதக் கணக்குகள் குறித்த புள்ளிவிவரங்களை திரட்டுவதற்காகதான் எனவும் சொல்லப்படுகிறது.