1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 13 மே 2022 (08:44 IST)

டிவிட்டரை வாங்கிய எலான் - 2 உயர் அதிகாரிகள் பதவி விலகல்?

டிவிட்டர் நிறுவனம் எலன் மஸ்க் வசம் செல்வதால் அந்த நிறுவனத்தில் இருந்து 2 உயர் அதிகாரிகள் பதவி விலக உள்ளனர். 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கினார். இதனையடுத்து அவர் டுவிட்டரில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 
 
முதல் கட்டமாக டுவிட்டர் நிறுவனத்திற்கான செலவுகளை குறைக்கவும் வருமானத்தை அதிகரிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது. இதற்காக ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் டிவிட்டர் நிறுவனம் எலன் மஸ்க் வசம் செல்வதால் அந்த நிறுவனத்தில் இருந்து 2 உயர் அதிகாரிகள் பதவி விலக உள்ளனர். ஆய்வு பிரிவில் பொது மேலாளராக உள்ள கைவோன் பெக்போர், அதிகாரி புரூஸ் பாக் ஆகியோர் வெளியேறுகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.