திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 5 ஏப்ரல் 2021 (16:56 IST)

என்ன பைத்தியக்காரத்தனம் இது? – காட்ஸில்லா Vs காங் பார்த்து கடுப்பான எலான் மஸ்க்!

சமீபத்தில் வெளியான காட்சில்லா காங் திரைப்படத்தை பார்த்த தொழிலதிபர் எலான் மஸ்க் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது வைரலாகியுள்ளது.

நிஜ உலகின் அயர்ன் மேன் என வர்ணிக்கப்படுபவர் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க். டெஸ்லா கார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி மையம் போன்றவற்றின் நிறுவனரான எலான் மஸ்க் மனிதர்களை சந்திரன், செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களுக்கு அழைத்து செல்லும் விண்கலம் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் வசூலித்த ஹாலிவுட் படமான காட்ஸில்லா Vs காங் திரைப்படத்தை எலான் மஸ்க் பார்த்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “காட்ஸில்லா Vs காங் மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. நான் பார்த்ததிலேயே மிகவும் பைத்தியக்காரத்தனமான படம் இதுதான். சதி கோட்பாட்டாளர்களுக்கு ஒரு காதல் கடிதம். மற்றும் மனதை கவரும் முடிவு” என பதிவிட்டுள்ளார்.

படத்தில் இடம்பெறும் ஹாலோ எர்த் கான்செப்ட் மற்றும் காட்சிகள் விஞ்ஞானத்தை மீறிய புனைவு என்பதாலும், அது உண்மை என பல காலமாக கூறி வரும் சதிகோட்பாட்டாளர்களின் கூற்றுக்கு வலு சேர்க்கும் வகையில் படத்தில் இந்த காட்சி உள்ளதாலும் எலான் மஸ்க் இவ்வாறு கூறியிருக்கலாம் என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது.