1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth.K
Last Modified: செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (10:44 IST)

வேங்க மவன் ஒத்தையில நிக்கென்.. ஒத்தையில வாலே! – எலான் மஸ்க்குக்கு சவால் விட்ட ஸுக்கெர்பெர்க்!

Elon Musk Vs Mark Zuckerberg
எலான் மஸ்க் மற்றும் மார்க் ஸுக்கெர்பெர்க் இடையே உண்மையாகவே குத்துச்சண்டை சவால் நடக்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



உலக பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியிருந்தார். ஆனால் ட்விட்டரில் அவர் செய்து வரும் மாற்றங்கள் பயனாளர்களை கடுப்பேற்றியதால் பலரும் வேறு சமூக வலைதளங்களுக்கு மாறத் தொடங்கினர். அப்போதுதான் மார்க் ஸுக்கெர்பெர்கின் மெட்டா நிறுவனம் ட்விட்டர் போலவே உள்ள த்ரெட்ஸ் செயலியை அறிமுகப்படுத்தியது.

இதனால் ட்விட்டர் Vs த்ரெட்ஸ் என்ற மோதல் தொடங்கியது. இதை நெட்டிசன்கள் பலர் மார்க் ஸுக்கெர்பெர்கும், எலான் மஸ்க்கும் ஒரு கூண்டுக்குள் பாக்சிங் செய்வது போல மார்பிங் செய்த வீடியோவை வைரலாக்கி வந்தனர். ஆனால் தற்போது மார்பிங்கில் நடந்த இந்த சண்டை உண்மையாகவே நடக்க போகிறதாம்.

ட்விட்டரில் தொடர்ந்து மார்க் ஸுக்கெர்பெர்க்கை எலான் மஸ்க் வம்பிழுத்து வந்த நிலையில் எலான் மஸ்க்குக்கு த்ரெட்ஸ் மூலம் பதில் அளித்துள்ள ஸுக்கெர்பெர்க் “நான் ரெடி. ஆகஸ்டு 26ம் தேதியை சண்டை போட பரிந்துரைக்கிறேன். முதலில் சண்டை போட கூப்பிட்டது அவர்தான். ஆனால் தேதியை உறுதிப்படுத்தவில்லை. இனியும் என்னால் பொறுமையாக இருக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

ஸுக்கெர்பெர்கின் சவாலை எலான் மஸ்க் ஏற்றுக் கொண்டால் உலக பணக்காரர்கள் இடையே நடக்கும் முதல் கூண்டு சண்டையாக இது இருக்கும். இதை லைவாக ஒளிபரப்பு செய்ய இப்போதே பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொள்ள தொடங்கியுள்ளனவாம். ஆனால் எலான் மஸ்க் இந்த ஒளிபரப்பை நேரடியாக அவரது X செயலியில் செய்யப்போகிறாராம்.

Edit by Prasanth.K