செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 19 நவம்பர் 2023 (12:14 IST)

கடலில் வெடித்து சிதறியது எலான் மஸ்க் நிறுவனம் அனுப்பிய ராக்கெட்: பெரும் அதிர்ச்சி..!

எலான் மஸ்க் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் நேற்று ஸ்டார்ஷிப் என்ற ராக்கெட்டை அனுப்பிய நிலையில் அனுப்பப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறி கடலில் விழுந்து தோல்வி அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் என்ற ஏவுகணை சோதனையை கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் நடத்திய போது அந்த சோதனை தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து நேற்று மீண்டும் ராக்கெட்டை ஏவும் சோதனை நடைபெற்றது. டெக்சாஸ் என்ற பகுதியில் இருந்து ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட  ஸ்டார்ஷிப்   ராக்கெட் பூஸ்டர் விண்ணில் ஏவப்பட்ட சில நொடிகளில் வெடித்து சிதறி மெக்சிகோ வளைகுடாவில் விழுந்தது.

இதனால் ஸ்டார்ஷிப் விஞ்ஞானிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில்  மீண்டும் ஏவுகணை ஏவ முயற்சி செய்வோம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

Edited by Siva