டுவிட்டர் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவை மாற்றினார் எலான் மஸ்க்!
உலகப் பெரும் கோடீஸ்வரர் பட்டியலிலில் முதலிடத்தில் உள்ளவர் எலான் மஸ்க். இவர், டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓவாகவும், டுவிட்டர் நிறுவத்தின் அதிபராகவும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார்.
சமீபத்தில், பல கோடிகள் கொடுத்து, உலகம் முழுவதும் பல கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைதளமான டுவிட்டரை வாங்கினார். இதையடுத்து, பல ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தார்.
இதையடுத்து, அதிகாரப்பூர்வ ப்ளூ டிக் வெரிபிகேசனை ப்ளூ, க்ரே, கோல்டன் என மூன்று டிக்குகளாக பிரித்து பணம் வசூலித்து வருகிறார். சமீபத்தில் ட்விட்டர் பயனாளர்கள் எத்தனை ட்வீட்டை பார்க்க முடியும் என்பதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளார்.
இந்நிலையில் ட்விட்டரின் லோகோவை மாற்ற உள்ளதாகவும், பறவைகளுக்கு விடுதலை அளிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இன்று டுவிட்டர் அதிபர் எலான் மஸ்க் தன் டுவிட்டர் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவை எக்ஸ் ( Twitter X ) என்று மாற்றியுள்ளார்.
இதற்குப் பலரும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.