திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 8 மார்ச் 2023 (16:54 IST)

பெண் ஊழியரிடம் மன்னிப்புக் கேட்ட எலான் மஸ்க்!

உலகப் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். இவர், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டுவிட்டர்   நிறுவன தலைவராக இருக்கிறார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 44 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கினார். அதன்பின்னர், அங்குப் பணியாற்றிய  ஊழியர்கள் சிலரை பணி நீக்கம் செய்தார்.

இந்த  நிலையில், டுவிட்டரில் ஒரு மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், எலான் மஸ்கிடம், ''தான் பணியில் இருக்கிறேனா இல்லையா'' என்று எலான் மஸ்கிடம் கேட்டிருந்தார்.

இதற்கு எலான் மஸ்க், அப்பெண்ணின் மாற்றுத்திறனைச் சுட்டிக்காட்டி, அவர் பணி செய்யவில்லை என்று கூறினார்.

இதற்கு நெட்டிசன்கள் எலான் மஸ்கிற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், எலான் மஸ்க் அப்பெண்ணிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

அதில், 'ஹல்லியின்  நிலையை நான் தவறுதாலப் புரிந்துகொண்டேன்… இதற்கு அவரிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன்….அவர் டுவிடரில் பணியில் இருப்பது பற்றி ஆலோசனை செய்துவருவதாகவும்' தெரிவித்துள்ளார்.