செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 1 ஜனவரி 2024 (22:01 IST)

ஜப்பானில் நில நடுக்கம்: கட்டிட இடிபாடுகளில் சிக்கி 6 பேர் பலி

japan earthquake
ஜப்பான் நாட்டின் மேற்குப் பகுதியில் இன்று சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது.
 
இது ரிக்டர் அளவில் 7.4 என பதிவாகியிருந்தது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து  சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் கடற்கரை ஓரமுள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
 
இந்த நிலையில், ஜப்பானில்  நில நடுக்கம் காரணமாக பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. சாலையில் திடீர் பள்ளங்கள் தோன்றியது இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சமடைந்தனர்.
 
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில நிமிடங்களில் சுனாமி அலைகள் தாக்கின. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
 
இந்த நிலையில், நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி  பேர் உயிரோடு புதைந்ததாகவும், அவர்களிய மீட்கும் பணி நடந்து வருவதாக தகவல் வெளியாகிறது.
 
இதுகுறித்து ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, ஜப்பான் மக்கள் மேலும் பல பேரிடர்களுக்கும் தயாராக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
மேலும், தொடர் நிலநடுக்கம் ஏற்படுவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.