ஒரு வழியாக சைலண்ட் ஆக ஓடிடியில் ரிலீஸ் ஆன கார்த்தியின் ஜப்பான்!
கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகி உள்ள நிலையில் இந்த படம் எதிர்பார்த்த அளவு இல்லை என்று தான் விமர்சனங்கள் எழுந்தன. கே எஸ் ரவிக்குமார் என்ற அரசியல்வாதிக்கு சொந்தமான நகைக்கடையில் 200 கோடி மதிப்புள்ள நகையை ஜப்பான் என்ற கார்த்தி திருடுகிறார் இதனால் அதிர்ச்சி அடையும் கே எஸ் ரவிக்குமார் காவல்துறையை அனுப்பி ஜப்பானை பிடிக்க உத்தரவிடுகிறார். ஜப்பான் காவல்துறையிடம் பிடிபட்டாரா என்பது தான் இந்த படத்தின் கதை.
மோசமான திரைக்கதை காரணமாக இந்த படம் ரசிகர்களை திருப்தி செய்யவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் ஜப்பான் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யப்படவில்லை என சொல்லப்ப்டுகிறது.
இந்நிலையில் தியேட்டரில் ஜொலிக்காத கார்த்தியின் ஜப்பான் திரைப்படம் நேற்று நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸானது. தியேட்டரில் ரிலீஸான போது வரவேற்பைப் பெறாத ஜப்பான் ஓடிடியில் ரிலீஸ் ஆனபின்னரும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தவில்லை.