1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 8 டிசம்பர் 2023 (18:16 IST)

கன்னத்தில் அறை வாங்க ரூ.170 கட்டணம் வசூலிக்கும் ஓட்டல்.. குவியும் வாடிக்கையாளர்கள்..!

ஜப்பானில் உள்ள ஹோட்டல் நிர்வாகம் தங்களது ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களின் கன்னத்தில் அறைய கட்டணம் வசூலித்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

ஹோட்டல் தொழிலில் தற்போது போட்டி அதிகமாகிவிட்டதை அடுத்து வித்தியாசமாக ஏதாவது செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ஜப்பானில் உள்ள ஒரு ஹோட்டலில் வரும் வாடிக்கையாளர்களுக்கு இளம்பெண் ஒருவர் கன்னத்தில் அறை விடுவார். அதற்காக தனியாக நுழைவது வசூலிக்கப்படும்

இந்த பெண்ணிடம் கன்னத்தில் அறை வாங்கி விட்டு சாப்பிட செல்லும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களின் கன்னத்தில் அறைவது ஏன் என்ற கேள்விக்கு பதில் இல்லை என்றாலும் இளம் பெண் கையால் அறை வாங்க பலர் முன் வருகின்றனர் என்றும் அதனால் தங்களது ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் ஹோட்டல் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்


Edited by Siva