செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (14:14 IST)

5வது முறையாக துருக்கியில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 5000ஐ நெருங்குகிறது..!

turkey
துருக்கியில் இதுவரை நான்கு பூகம்பங்கள் ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஐந்தாவது முறையாக பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளின் எல்லையில்  பூகம்பம் ஏற்பட்டது என்பதும் இதனால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டம் ஆகி ஏராளமான சேதத்தை உருவாக்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
சற்றுமுன் கிடைத்த தகவலின் படி துருக்கியின் கிழக்கு பகுதியில் ஐந்தாவது முறையாக மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 என பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் மீட்பு படையினரின் தகவலின்படி இதுவரை 4983 பேர் பலியாகி உள்ளதாகவும் இன்னும் ஏராளமான மீட்பு பணிகள் நடைபெற இருப்பதால் பலி எண்ணிக்கையை உயரும் என அஞ்சப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
 
இந்த நிலையில் துருக்கி நில நடுக்கத்திற்கான நிவாரண பொருட்கள் மற்றும் சிறப்பு பயிற்சி பெற்ற நாய்களுடன் இந்திய மீட்பு குழு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran