திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 27 ஜனவரி 2017 (17:25 IST)

ஆபத்தான நிலையில் பூமி: பிப்ரவரி 16 பூமியை தாக்க போகும் பேரழிவுகள்; அதிர்ச்சி தகவல் தரும் ரஷ்யர்!!

ரஷ்யாவைச் சேர்ந்த வானியலாளர் ஒருவர் அடுத்த மாதம் பூமியை ஒரு மர்ம பொருள் தாக்கவுள்ளதால் சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.


 
 
கடந்த ஆண்டு நாசா ஒரு விசித்திரமான பொருளை பூமியின் சுற்று வட்டப்பாதையில் கண்டுள்ளது. அதன் பெயர் டபிள்யூஎப் 9 என்று கூறியது. மேலும், ஒரு விண்கல் அல்லது சிறுகோளாக இருக்கலாம் என்று கணித்தது.
 
இதனை அடுத்து, அண்மையில் பூமியை நோக்கி ஒரு மர்மமான பொருள் வருவதாகவும், அதனால் பூமிக்கும் எந்த ஒரு பிரச்சனை இல்லை என்றும் நாசா அறிவித்தது. பூமிக்கு 51 மில்லியன் கிலோ மீடார் தொலைவில் அது கடந்து சென்று விடும் என தெரிவித்தது.
 
இந்நிலையில் ரஷ்யாவைச் சேர்ந்த வானியலாளர் டாக்டர் டயோமின் தமிர் சகாரோவிச் ஒரு அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளார்.
 
அது என்னவெனில், டபிள்யூஎப் 9 என்ற அந்த மர்ம பொருள் குறிப்பிட்டது போல் பிப்ரவரி 16 ஆம் தேதி பூமியை வந்து தாக்கும். இதனால் பூமியின் பல பகுதிகளில் சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்படக்கூடும் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.