1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: வெள்ளி, 27 ஜனவரி 2017 (17:24 IST)

மாணவியை வகுப்பறையிலேயே சிறுநீர் கழிக்க வைத்த ஆசிரியை: 8.5 கோடி ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்!

மாணவியை வகுப்பறையிலேயே சிறுநீர் கழிக்க வைத்த ஆசிரியை: 8.5 கோடி ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தீ பாட்ரிக் ஹென்றி உயர்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அங்கு படிக்கும் மாணவி ஒருவரை ஆசிரியர் சிறுநீர் கழிக்க கழிவறைக்கு அனுமதிக்காமல் வகுப்பறையிலேயே சிறுநீர் கழிக்க வைத்த சம்பவம் நடந்துள்ளது.


 
 
இதனால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இந்திய ரூபாயின் மதிப்பில் 8.5 கோடி ரூபாய் இழப்பீடு  வழங்கவும் ஆசிரியரை கண்டித்தும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
 
கடந்த 2012-ஆம் ஆண்டு வகுப்பு நடந்துக்கொண்டு இருந்தபோது சிறுநீர் கழிக்க செல்ல வேண்டும் என குறிப்பிட்ட மாணவி ஒருவர் ஆசிரியையிடம் அனுமதி கேட்டுள்ளார். இதற்கு அனுமதி மறுத்த ஆசிரியர் வகுப்பறையில் இருந்த வாளி ஒன்றில் சிறுநீர் கழிக்குமாறு கூறியுள்ளார்.
 
வேறு வழி இல்லாமல் வாளியிலேயே மாணவி சிறுநீர் கழித்துள்ளார். பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற மாணவி தனக்கு தனக்கு நேர்ந்த அவமானம் தற்கொலைக்கு முயன்றுள்ளார். மாணவியை காப்பாற்றிய அவரது பெற்றோர் நடந்த சம்பவத்தை தெரிந்துகொண்டு அந்த ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
 
நான்கு ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இதன் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது. மாணவியை தான் அனுமதிக்காததுக்கு காரணம் வகுப்பு நேரத்திலு செல்லக்கூடாது என்பதற்காக தான். அதனால் தான் வகுப்பறையில் சிறுநீர் கழிக்க கூறினேன் என ஆசிரியர் விளக்கம் அளித்தார்.
 
இதனை ஏற்காத நீதிபதி, அந்த மாணவியின் கண்ணியத்தை சீர்குலைத்த குற்றத்திற்காக ஆசிரியருக்கு 1.25 மில்லியன் டாலர் அதாவது 85080625 இந்தியா ரூபாய் இழப்பீடாக அளிக்க வேண்டும் என மாவட்ட பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.