1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (18:54 IST)

கழுகா ? மனிதனா ? – டிவிட்டரில் வைரலாகும் வினோதப் பறவை !

டிவிட்டர் மற்றும் சமூகவலைதளங்களில் கடந்த சில நாட்களாக பகிரப்பட்டு வரும் வினோத பறவை ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கடந்த சில தினங்களாக டிவிட்டரில் ஒரு வினோத ராட்சசப் பறவையின் புகைப்படம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதற்குக் காரணம் அந்த கழுகு பார்ப்பது மனிதன் பார்ப்பது போலவே உள்ளது. கழுகு வேடம் அணிந்த ஒரு மனிதன் போலவே உள்ளது.

இந்த கழுகின் 3 புகைப்படங்கள் டிவிட்டரில் ட்ரண்ட்டாக, அந்த கழுகு ஹார்பி வகை கழுகு என்றும் அது தென் அமெரிக்க காடுகளில் மட்டுமே வாழும் எனவும் தெரிவித்துள்ளனர்.