செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 2 மார்ச் 2023 (11:12 IST)

ரஷியாவில் அடுத்தடுத்து 'டிரோன்' தாக்குதல்: உக்ரைன் கைவரிசையா?

putin
ரஷ்யாவில் அடுத்தடுத்து 'டிரோன்'  தாக்குதல் நடைபெற்று வருவதை அடுத்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்த அந்நாட்டு அதிபர் புதின் உத்தரவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்து ஒரு ஆண்டு கடந்தும் தீவிரமாக இருநாட்டின் எல்லைகளில் தாக்குதல் நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் ரஷ்யாவின் எல்லை பகுதியில் அடிக்கடி ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்றும் உக்ரைன் நாட்டிலிருந்து தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று இரவு திடீரென ரஷ்யாவின் எல்லை பகுதியில் 3 இடங்களில் அடுத்தடுத்து ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் கார் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் ஒரு ட்ரோன் நொறுங்கி விழுந்தது என்றும் இதில் யாருக்கும் காயம் இல்லை என்றும் கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டு உள்ளார்.
 
Edited by Mahendran