வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 10 செப்டம்பர் 2017 (23:59 IST)

இர்மா புயல் கோரத்தாண்டவம்: தண்ணீரில் மூழ்கிய அமெரிக்க நகரங்கள்

அமெரிக்காவை வடகொரியா மட்டுமின்றி அவ்வப்போது பெரும் புயலும் அச்சுறுத்தி வரும் நிலையில் இர்மா புயல் தற்போது புளோரிடா மீது கோரத்தாண்டவம் ஆடியுள்ளது.



 
 
இந்த புயலால் ஏற்பட்ட சேதம் குறித்த விவரம் இன்னும் வெளிவரவில்லை. இந்த புயல், அமெரிக்க நேரப்படி காலை 7 மணி முதல் 8 மணிக்குள் புளோரிடாவை கடந்து செல்லும் என வானிலை எச்சரித்திருந்தது .அதன்படி, தற்போது அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப்பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது.
 
இந்த நிலையில் டௌண்டவுன் மற்றும் மியாமி நகரம் முற்றிலும் தண்ணீரால் மூழகடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அங்குள்ள மக்கள் ஏற்கனவே பாதுகாப்பான பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு உதவும வகையில் ஹாட் லைன் எண் 202 258 8819 அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அட்லாண்டா பகுதி இந்தியர்களுக்கான உதவியை நியூயார்க் நகரில் உள்ள தூதரக பொது அதிகாரி சந்தீப் சக்ரவர்த்தியை +14044052567 மற்றும் +1678179393 என்ற எண் மூலம் தொடர்பு கொள்ளலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.