வெளிநாட்டினருக்கு பிறக்கும் குழந்தைக்கு குடியுரிமை: சட்டத்தை நீக்க டிரம்ப் முடிவு..!
அமெரிக்காவில் வெளிநாட்டினருக்கு பிறக்கும் குழந்தைக்கு குடியுரிமை வழங்கப்படும் என்ற சட்டத்தை அதிபராக பதவியேற்க இருக்கும் டொனால்ட் டிரம்ப் நீக்க உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் வெளிநாட்டுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கும் சட்டம் கடந்த 150 ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில், அமெரிக்காவில் பிறந்த இந்தியர்கள் உள்பட அனைத்து நாடுகளின் குழந்தைகளுக்கும் எளிதாக குடியுரிமை கிடைத்து வந்தது. ஆனால் இந்த சட்டத்தை மாற்ற டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
150 ஆண்டு கால சட்டத்தை டிரம்ப் மாற்றுவது என்பது மிகவும் எளிதாக இருக்காது என்றாலும், இதை மாற்றி தீர்வது என்று அவர் உறுதிப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் வெளிநாட்டினருக்கு பிறக்கும் குழந்தைக்கு குடியுரிமை வழங்குவது என்பது அதிகார துஷ்பிரயோகம். அமெரிக்க குடிமகனாக மாறுவதற்கு இது மாதிரி எளிதான வழிமுறைகள் நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த முடிவால் அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
Edited by Siva