பிக் பாஸ் 3 ஜூன் 23 முதல்! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவுப்பு!

Last Updated: வியாழன், 30 மே 2019 (14:46 IST)
பிக் பாஸ் 3 சீசன் வரும் ஜூன் 23ம் தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளிவந்துள்ளது. 
 
கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ்.  ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி சீசன் 1 , சீசன் 2 , என்ற இரண்டு பாகமும் பட்டிதொட்டியெங்கும் பரவியது. இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் 3 சீசனுக்கான பணிகள் துவங்கி கமல் பங்குபெறும் ப்ரோமோ ஷூட் படுமும்முரமாக நடைபெற்றது.  இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த நிகழ்ச்சியில் 15 பிரபலங்கள் கலந்து கொண்டு, 100 நாட்கள் ஒரே வீட்டில் வசிப்பர். இறுதியில் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டு, பல லட்ச ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படும். இந்தியில் ஆரம்பித்த இந்நிகழ்ச்சி  தமிழ் ரசிகர்கள் மத்தியில் மெல்ல, மெல்ல தீயாய் பற்றிக் கொண்டது. இரண்டு சீசன்கள் முடிவடைந்த நிலையில், மூன்றாவது சீசனுக்கான வேலைகள் படுமும்முரமாக நடந்துவந்தது.
 

 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், பிக்பாஸ் 3 சீசன் ஆரம்பிக்கும் தேதி குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, வரும் ஜூன் 23ஆம் தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 ஒளிபரப்பாகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :