1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: செவ்வாய், 12 ஜூலை 2016 (13:14 IST)

டைனோசர்கள் வாழ்ந்த நகரங்கள்

ஜெர்மனியில் டைனோசர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


 

 
ஜெர்மனியில் டைசோனர்கள் வாழ்ந்தனவா என்பது குறித்து பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வந்தனர்.
 
இந்நிலையில், மேற்கு ஜெர்மனியில் இறைச்சி உண்ணும் இனத்தை சேர்ந்த டைனோசர்கள் வாழ்ந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முன் மேற்கு ஜெர்மனி கடல் சூழ்ந்த பகுதியாக இருந்துள்ளது. குறிப்பாக தற்போது உள்ள பெர்லின் மற்றும் ஹேம்பர்க் நகரங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் டைனோசர்கள் வாழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
 
டைனோசர்களின் படிமங்களை கண்டுபிடித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், அவற்றை ஆராய்ந்தால் மேலும் பல உண்மைகள் தெரியவரும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.