இளவரசருக்கே மரண தண்டனையா??
குற்றங்களுக்கு கடுமையான தண்டனையளிப்பதில் பெயர் போன நாடு சவுதி அரேபியா. அந்த வகையில் சவுதி இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்ற பட்டுள்ளது.
சவுதி அரேபியா இளவரசர் 'துர்க்கி பின் சவுத் அல்-கபீர்'. இவருக்கு தான் மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது. இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது நண்பரை கொலை செய்த வழக்கில் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அரச குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள் மரண தண்டனையில் சிக்குவது அரிதான ஒன்றாகும். இதே போல் சவுதியில் 1977-ம் ஆண்டு அரச குடும்பத்தின் உறுப்பினர் ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.